பிட்புல் நாய் கடித்துக் குதறியதில் 11 வயது சிறுவன் படுகாயம்.. நாயின் உரிமையாளருக்கு ரூ.5,000 அபராதம் விதித்த போலீசார்!
உத்தர பிரதேசத்தில் பிட்புல் நாய் கடித்துக் குதறியதில் 11 வயது சிறுவன் படுகாயமடைந்த நிலையில், நாயின் உரிமையாளருக்கு 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
காசியாபாத்தில் வீட்டின் அருகே பூங்காவில் 11 வயது சிறுவன் விளையாடி கொண்டிருந்தபோது, பெண்ணுடன் நடைபயிற்சிக்கு வந்த பிட்புல் நாய் திடீரென சிறுவனை தாக்கி கடித்து குதறியது.
முகம் முழுவதும் காயமடைந்த சிறுவனுக்கு 200 தையல் போடப்பட்டு சிகிச்சை பெற்ற நிலையில், அவரது பெற்றோர் அளித்த புகாரின்பேரில் விசாரணை நடத்திய போலீசார், உரிமம் மற்றும் பதிவு இல்லாமல் செல்லப்பிராணியை வளர்த்த நாயின் உரிமையாளருக்கு 5,000 அபராதம் விதித்தனர்.
Comments