அரசு பேருந்தில் ஏற முயற்சித்த பள்ளி மாணவன் மீது பேருந்து ஏறி இறங்கி விபத்து.!
சென்னையில் ஓடும் அரசு பேருந்தில் ஏற முயற்சித்த பள்ளி மாணவன் மீது பேருந்தின் சக்கரம் ஏறி இறங்கி விபத்துக்குள்ளானது.
பள்ளிக்கரணை காவல் நிலையம் எதிரே தாம்பரத்தில் இருந்து அடையார் செல்லக்கூடிய தடம் எண் 99 பேருந்தில் ஏற முயற்சித்த பள்ளி மாணவன் ஆர்யா திடீரென தவறி கீழே விழுந்ததில், இடுப்பு மற்றும் கால் பகுதியில் பேருந்தின் சக்கரம் ஏறி இறங்கியது.
படுகாயமடைந்த மாணவனை அருகில் இருந்தவர்கள் மீட்டு ஆம்புலன்ஸில் ஏற்றி குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
Comments