மூன்றாம் பாலினத்தவர்கள் வேலைவாய்ப்பு பெறுவதற்கான கொள்கையை உருவாக்கும்படி மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்.!
மூன்றாம் பாலினத்தவர்கள் வேலைவாய்ப்பு பெறுவதற்கான கொள்கையை உருவாக்கும்படி மத்திய அரசை உச்சநீதிமன்றம் கேட்டு கொண்டுள்ளது.
ஏர் இந்தியா விமான நிறுவனத்தில், மூன்றாம் பாலினத்தவர் என்பதற்காக தனக்கு விமான பணியாளருக்கான வேலை மறுக்கப்பட்டது எனக் கூறி, ஷானவி பொன்னுசாமி என்ற திருநங்கை சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் டி.ஒய். சந்திரசூட் மற்றும் ஹிமா கோலி தலைமையிலான அமர்வு மூன்றாம் பாலினத்தவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க உதவும் வகையில் ஒரு கொள்கையை உருவாக்குவதற்காக அனைத்து உறுப்பினர்களுடனும் கலந்து ஆலோசிக்கும்படி மத்திய அரசை கேட்டு கொண்டது.
Comments