சீட் பெல்ட் அலாரங்களை முடக்கும் சாதனங்களை விற்பதை நிறுத்த வேண்டும்-அமேசானுக்கு மத்திய அரசு நோட்டீஸ்
கார்களில் சீட் பெல்ட் அலாரங்களை முடக்கும் சாதனங்களை விற்பதை நிறுத்துமாறு ஆன்லைன் நிறுவனமான அமேசானை அரசு கேட்டுக் கொண்டுள்ளதாக மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார்.
இது குறித்து தெரிவித்த அவர், அமேசானில் கிடைக்கும் மெட்டா கிளிப் சாதனங்களை காரில் பொருத்தினால், சீட் பயன்படுத்தாதபோது எழும் அலாரத்தைத் தவிர்க்க முடியும் என்றும் சீட் பெல்ட் அணிவதை தவிர்க்க மக்கள் இதனை வாங்குவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.இதன் காரணமாக அந்த கிளிப்களின் விற்பனையை நிறுத்துமாறு அமேசானுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக கட்காரி கூறியுள்ளார்.
Comments