காதல் கணவரை தன்னுடன் சேர்த்து வைக்கக்கோரி, அவருடைய வீட்டு முன்பு என்ஜீனியரிங் பட்டதாரி பெண் தர்ணா போராட்டம்.!

0 3923

ஈரோடு மாவட்டம் பவானியில் காதல் கணவரை தன்னுடன் சேர்த்து வைக்கக்கோரி, அவருடைய வீட்டு முன்பு என்ஜீனியரிங் பட்டதாரி பெண் தர்ணாவில் ஈடுபட்டார்.   

சின்னப்பனின் மகளான ரஞ்சனி, பெங்களூரில் உள்ள தகவல் தொழில்நுட்ப பொருள்கள் தயாரிப்பு நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.  அந்த நிறுவன உரிமையாளரான வெங்கிடு மகன் மோகன்ராஜூம், அவரும் காதலித்து கோவிலில் திருமணம் செய்து, பெங்களூரில் குடும்பம் நடத்தி வந்துள்ளனர். 

கடந்த வாரம் மோகன்ராஜ், பவானியிலுள்ள பெற்றோர் வீட்டுக்கு வந்துவிட்டு ரஞ்சனியை தவிர்த்து வந்துள்ளார். இதனால் ரஞ்சனி தர்ணாவில் ஈடுபடவே, போலீசார் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததால் திரும்பி சென்றார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments