திருமணம் செய்துகொள்வதாக கூறி பெண்காவலரை ஏமாற்றிய சிறப்பு உதவி ஆய்வாளர் கைது.!
திருமணம் செய்து கொள்வதாக உறுதியளித்து நெருங்கி பழகி, பின்னர் கைவிட்டு விட்டதாக பெண்காவலர் ஒருவர் கொடுத்த புகாரின் பேரில் சிறப்பு உதவி ஆய்வாளர் சரவணன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நீலகிரி மாவட்டம் மஞ்சூர் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணிபுரியும் சரவணனும், குன்னூர் காவல் நிலையத்தில் பணிபுரியும் பெண் காவலர் புனிதாவும் நெருங்கி பழகியதாக கூறப்படுகிறது.
ஆரம்பத்தில் திருமணம் செய்து கொள்வதாக உறுதியளித்த சரவணன், பின்னர் திருமணம் செய்து கொள்ளாமல் தட்டி கழித்ததாக பெண் காவலர் புனிதா, கோவை ஐ.ஜி அலுவலத்தில் புகார் அளித்தார். இதன் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் சிறப்பு உதவி ஆய்வாளர் சரவணனை இன்று கைது செய்தனர்.
Comments