கோவில் திருவிழாக்களில் ஆடல், பாடல் நிகழ்ச்சிகளை நடத்த பல்வேறு நிபந்தனைகள்

0 3709

கோவில் திருவிழாக்களில் ஆடல், பாடல் நிகழ்ச்சிகளை நடத்த மதுரை உயர்நீதிமன்ற கிளை பல்வேறு நிபந்தனைகளை விதித்துள்ளது.

ஆடல் பாடல் கலை நிகழ்ச்சிக்கு அனுமதிக்க கோரி தாக்கல் செய்யப்பட்ட  மனுக்களை இன்று விசாரித்த மதுரை உயர்நீதிமன்ற கிளை, ஆடல் பாடல் நிகழ்ச்சியில் ஆபாச நடனமோ, அநாகரிகமான உரையாடல்களோ இடம்பெற கூடாது,  எந்த ஒரு அரசியல் கட்சியோ, மதம், சமூகம் அல்லது சாதியை குறிப்பிடும் விதத்திலோ பாடல்களோ அல்லது நடனமோ இருக்க கூடாது, எந்த அரசியல் கட்சியோ அல்லது மதத்துக்கோ ஆதரவாகவோ,  எதிராகவோ ஃப்ளெக்ஸ் போர்டுகள் வைக்க கூடாது, என பல்வேறு நிபந்தனைகளை விதித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments