டாடா சன்ஸ் முன்னாள் தலைவர் சைரஸ் மிஸ்திரி சென்ற கார் ஆய்வுக்காக ஜெர்மனி அனுப்பப்படுவதாக அதிகாரி தகவல்!
சாலை விபத்தில் உயிரிழந்த டாடா சன்ஸ் முன்னாள் தலைவர் சைரஸ் மிஸ்திரி சென்ற காரின் மின்னணு கட்டுப்பாட்டு தொகுதி ஆய்விற்காக ஜெர்மனிக்கு அனுப்பப்படுவதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இயந்திர கோளாறுகள் மற்றும் ஓட்டுனரின் தவறு போன்றவை இதன் மூலம் கண்டறிய முடியும் என்றும், முடிவு அடுத்த ஓரிரு நாட்களில் தெரியவரும் என்றும் அவர் தெரிவித்தார்.
சில தினங்களுக்கு முன்பு மெர்சிடஸ் பென்ஸ் சொகுசு காரில் சைரஸ் மிஸ்திரி தனது நண்பர்களுடன் சென்றபோது மகாராஷ்டிராவில் நிகழ்ந்த விபத்தில் சைரஸ் மிஸ்திரி உள்பட 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
Comments