மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் பாதுகாப்பு வளையத்துக்குள் அத்துமீறி நுழைந்த நபர் கைது!

0 3075

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் பாதுகாப்பு வளையத்துக்குள் அத்துமீறி நுழைந்த நபரை மும்பை போலீசார் கைது செய்துள்ளனர்.

மும்பையில் கடந்த 30ம் தேதி  மகாராஷ்டிர முதலமைச்சர் ஏக்நாத் சிண்டே, துணை முதலமைச்சர் தேவேந்திர பட்னவீஸ் ஆகியோரை அவர்களின் இல்லங்களில்  அமித் ஷா சந்தித்து பேசினார்.

இதையொட்டி அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த நிலையில்,  மத்திய உள்துறை அமைச்சக அதிகாரி என அடையாளப்படுத்தி, மகாராஸ்டிராவை சேர்ந்த ஹேமந்த் பவார் என்பவர்  நடமாடியுள்ளார்.

அதற்கான போலி அடையாள அட்டையையும் அவர் வைத்திருந்துள்ளார். ஹேமந்த் பவார் தெரிவித்தது பொய் என்பதை கண்டுபிடித்த போலீசார், அவரை கைது செய்தனர். இதையடுத்து 5 நாள் போலீஸ் காவலில் எடுக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments