பல்வேறு புதிய வசதிகளுடன் ஐபோன்-14 சீரிசை அறிமுகம் செய்தது ஆப்பிள் நிறுவனம்

0 13349

நவீன தொழில்நுட்பங்களுடன் கூடிய ஐ போன் 14 சீரிஸ் மாடல்களை ஆப்பிள் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் கூப்பர்டினோவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தலைமைச் செயல் அதிகாரி டிம் குக் ஐபோன் புதிய மாடல் ஐபோன்களை அறிமுகம் செய்து வைத்தார். துல்லியமான கேமரா, நீண்ட காலம் நீடிக்கும் பேட்டரி உள்ளிட்ட வசதிகள் இதில் இடம்பெற்றுள்ளன.

இந்தியா உள்ளிட்ட நாடுகளில் வரும் 16ந் தேதி முதல் ஐபோன் 14 மாடல் விற்பனைக்கு வருகிறது. ஐபோன் 14 மாடல்களின் விலை குறைந்தபட்சம் 79,900 ரூபாயாகவும், ஐபோன் 14 புரோ மேக்ஸ் விலை 1,39,900 ரூபாயாகவும் இருக்கும் என்று கூறப்படுகிறது. 

இந்நிகழ்ச்சியில் அறிமுகப்படுத்தப்பட்ட வாட்ச் சீரிஸ் 8 விளையாட்டு, உடற்பயிற்சி, ஆராய்ச்சி, வெளியுலக தொடர்பு போன்றவற்றுக்கு பயனுள்ளதாக இருக்கும் என ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments