மும்பை தாக்குதல் உள்ளிட்ட உலகெங்கும் தீவிரவாதத்தால் உயிரிழந்தோருக்கு ஐ.நா. தலைமையகத்தில் அஞ்சலி

0 2474

உலகம் எங்கும் தீவிரவாதத்தால் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக ஐநா.சபையின் முதல் கூட்டம் இன்றும் நாளையும் நியுயார்க் நகரில் உள்ள ஐநா.தலைமையகத்தில் நடைபெறுகிறது.

ஐ,நா,பொதுச்செயலாளர் அந்தோணியோ குட்டாரஸ் இதனை தலைமையேற்று நடத்துகிறார்.இக்கூட்டத்தில் மும்பைத் தாக்குதலில் உயிரிழந்தோர் உட்பட அனைத்துத் தீவிரவாதத் தாக்குதல் சம்பவங்களில் பலியான அப்பாவி மக்களுக்கு அஞ்சலி செலுத்தப்படுகிறது.

பாதிக்கப்பட்ட, மீண்டு வந்த குடும்பத்தினர் தங்கள் அனுபவங்களை நேரடியாக விவரிக்கவும் அவர்களுக்கு வேண்டிய உதவிகளை செய்யவும் ஐநா.சபை முன்வந்துள்ளது.தீவிரவாதத்தை ஒடுக்க பல்வேறு நாடுகளின் அரசுகள் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும் இந்த இரண்டு நாள் மாநாட்டில் விவாதிக்கப்பட உள்ளது

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments