உயிரிழந்த சிறுவன் உடலை உப்புக் குவியலில் புதைத்த சம்பவம்.. இறந்த பிறகு மீண்டும் உயிர் வருமா..?

0 3443
வாட்ஸ் அப்பில் வந்த செய்தியை நம்பி, நீரில் மூழ்கி உயிரிழந்த சிறுவனை உப்புக் குவியலில் புதைத்து மீண்டும் உயிர்த்தெழுப்ப முயன்ற மூடநம்பிக்கை கர்நாடகாவில் நடந்துள்ளது.

வாட்ஸ் அப்பில் வந்த செய்தியை நம்பி, நீரில் மூழ்கி உயிரிழந்த சிறுவனை உப்புக் குவியலில் புதைத்து மீண்டும் உயிர்த்தெழுப்ப முயன்ற மூடநம்பிக்கை கர்நாடகாவில் நடந்துள்ளது.

பெல்லாரி மாவட்டம் சிர்வாரா கிராமத்தில் குளிக்க சென்ற 10 வயது சிறுவன் ஆழமான பகுதிக்கு சென்றதால் நீரில் மூழ்கி உயிரிழந்தான்.

சிறுவனின் உடலை பெற்றோரும், கிராம மக்களும் மீட்ட நிலையில், அப்பகுதியை சேர்ந்த ஒருவரின் பேச்சை கேட்டு மூட நம்பிக்கையின் அடிப்படையில் சிறுவனை உயிர்த்தெழச் செய்வதற்கு தலையைத் தவிர்த்து உடல் முழுவதும் உப்பை கொட்டி புதைத்தனர்.

சிறுவன் உடலை சுற்றி அவரது பெற்றோரும், உறவினர்களும் கதறி அழுத நிலையில், சுமார் 8 மணிநேரம் ஆகியும் உயிர் பிழைக்காததால் உப்பு குவியலில் இருந்து எடுக்கப்பட்டு சிறுவனின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments