"8 கோடி தமிழக மக்களுக்கு 23,000 மருத்துவர்களே உள்ளனர்" - போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர் பேட்டி
டெல்லியில் கடமை பாதையை நாளை திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி..
டெல்லியில் கடமை பாதை என பெயர் மாற்றப்பட்ட ராஜபாதையையும், இந்தியா கேட்டில் நிறுவப்பட்டுள்ள சுதந்திர போராட்ட வீரர் சுபாஷ் சந்திர போஸின் சிலையையும் பிரதமர் மோடி நாளை திறந்து வைக்கவுள்ளார்.
ஆண்டுதோறும் ஜனவரி மாதம் 26ம் தேதி பிரமாண்ட குடியரசுத் தின அணிவகுப்பு, டெல்லியிலுள்ள ராஜபாதையிலேயே நடைபெறும்.
அந்த பாதை Central Vista திட்டத்தின்கீழ் மேம்படுத்தப்பட்டு கடமை பாதை என்று பொருள்படும் கர்தவ்யா பாத் (Kartavya Path) என்று மத்திய அரசு பெயர் மாற்றியுள்ளது.
இதுகுறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், காலனியாதிக்க மனோபாவத்தை நீக்கி புதிய இந்தியாவை ஏற்படுத்துவதற்கான பிரதமர் மோடியின் 2வது கட்ட நடவடிக்கை இது என குறிப்பிடப்பட்டுள்ளது.
Comments