முன்னாள் அமைச்சர் கக்கனின் மகன் பாக்கியநாதனுக்கு சிறுநீரகம், இருதய கோளாறு.. சிகிச்சைக்கான செலவை அரசு ஏற்க கோரிக்கை..!
தமிழக அரசியலில் எளிமைக்கு இலக்கணமாக வாழ்ந்து மறைந்த முன்னாள் அமைச்சர் கக்கனின் மகன் பாக்கியநாதன் மிகவும் உடல்நலம் பாதிக்கப்பட்டு சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
75 வயதை கடந்த பாக்கியநாதனுக்கு சிறுநீரகமும் , இருதயமும் பாதிக்கப்பட்டு தற்போது தீவிரசிகிச்சை பிரிவில் அனுமதிக்கப் பட்டுள்ளார்.
ஆஞ்சியோ சிகிச்சைக்காக 4 ஆயிரம் ரூபாய் செலுத்தமுடியாத நிலையில் முதல்வர் காப்பீட்டு திட்ட அட்டை இல்லாத காரணத்தால் அதனை பெற அவரது இளைய மகன் கடும் முயற்சி மேற்கொண்டு வருகிறார்.
வறுமையில் வாடும் தங்களது குடும்பத்திற்கு அரசு உதவ வேண்டும் என்றும், பாக்கியநாதனின் மருத்துவ செலவை அரசே ஏற்க வேண்டும் என்றும், பாக்கியநாதனின் மனைவி சரோஜினிதேவி அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
Comments