பிரிட்டனின் புதிய பிரதமராக லிஸ் டிரஸை நியமித்தார் ராணி 2ம் எலிசபெத்..!
பிரிட்டனின் புதிய பிரதமராக லிஸ் டிரஸை அந்நாட்டு ராணி இரண்டாம் எலிசபெத் நியமித்துள்ளார்.
போரீஸ் ஜான்சன் பதவி விலகல் முடிவை அடுத்து, கன்சர்வேடிவ் கட்சியில் புதிய பிரதமரை தேர்வு செய்ய நடைபெற்ற தேர்தலில் இந்திய வம்சாவளியை சேர்ந்த நிதியமைச்சரான ரிசி சுனக்கை தோற்கடித்து லிஸ் டிரஸ் வெற்றி பெற்றார்.
இதையடுத்து ஸ்காட்லாந்து சென்று ராணியை நேரில் சந்தித்து லிஸ் டிரஸ் ஆட்சியமைக்க உரிமை கோரினார்.
அப்போது புதிய அரசை அமைக்கும்படி லிஸ் டிரஸை ராணி கேட்டுக் கொண்டதாகவும், இதை லிஸ் டிரஸ் ஏற்றுக் கொண்டதாகவும் அரச குடும்பம் வெளியிட்ட பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments