விலை உயர்ந்த பொருட்களை குறிவைத்து நூதன முறையில் திருடி வந்த 5 பேர் கைது
வெளிநாடுகளுக்கு கொண்டு செல்வதற்காக லாரிகளில் எடுத்து செல்லப்படும் விலை உயர்ந்த பொருட்களை குறிவைத்து நூதன முறையில் திருடி வந்த 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
தாம்பரம் சானடோரியத்தில் இயங்கி வரும் கெமிக்கல் தயாரிக்கும் தொழிற்சாலையில் இருந்து ஜெர்மன் அனுப்புவதற்காக அனுப்பப்பட்ட 24 டன் பேரல்களில் 9 டன் கெமிக்கல் பேரல்கள் காணாமல் போனது.
இது தொடர்பாக அந்த நிறுவனம் கொடுத்த புகாரின் அடிப்படையில் குற்றவாளிகளை தாம்பரம் போலீசார் தேடிவந்தனர். இந்நிலையில், 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
குற்றவாளிகளை பிடித்த போலீசாரை பாராட்டிய தாம்பரம் மாநகர கமிஷ்னர் அமல்ராஜ், சரக்கு வாகனத்தில் ஜிபிஎஸ் பொருத்தி வழி தடத்தை கண்காணிக்க வேண்டும் என நிறுவனங்களுக்கு அறிவுறுத்தினார்.
Comments