நிதி நிறுவனத்தில் கொள்ளையடிக்க முயன்ற கும்பலை சேர்ந்தவன் என்கவுன்டரில் சுட்டுக்கொலை
ஜார்க்கண்டில், நிதி நிறுவனத்தில் கொள்ளையடிக்க முயன்ற கும்பலை சேர்ந்த ஒருவனை போலீசார் என்கவுன்டர் நடத்தி சுட்டுக் கொன்றனர்.
தன்பாத் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் முத்தூட் நிதி நிறுவனத்துக்குள் கார்ப்ரேட் ஊழியர்கள் போல் நடித்து உள்ளே புகுந்த 5 பேர் கொண்ட கும்பல், நிதி நிறுவன மேலாளரை துப்பாக்கி முனையில் பிணை கைதியாக வைத்து தங்க நகைகள் மற்றும் பணத்தை கொள்ளையடிக்க முயன்றதாக கூறப்படுகிறது.
தகவலறிந்து விரைந்த போலீசார், அந்த கொள்ளை கும்பலை சுற்றி வளைத்து துப்பாக்கியால் சுட்டதில் ஒருவர் உயிரிழந்த நிலையில், படுகாயடைந்த இருவரை கைது செய்து கைத்துப்பாக்கிகளை பறிமுதல் செய்தனர்.
Comments