ஆன்லைன் ரம்மி நிறுவனங்களும், தி.மு.க.வும் உடன்பாடு - எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

0 2510
ஆன்லைன் ரம்மி நிறுவனங்களும், தி.மு.க.வும் உடன்பாடு - எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

ஆன்லைன் ரம்மியை தடை செய்வது தொடர்பாக அ.தி.மு.க. ஆட்சியில் சட்டம் நிறைவேற்றப்பட்டதாகவும், தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு ஆன்லைன் ரம்மி நிறுவனங்களும், அக்கட்சியும் உடன்பாடு செய்து கொண்டுள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளார்.

கோவையில் இருந்து ஒட்டன்சத்திரம் நோக்கிச் சென்ற அவருக்கு, திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் அ.தி.மு.க.வினர் வரவேற்பளித்தனர். பின்னர் தொண்டர்கள் முன்னிலையில் பேசிய அவர், தேர்தல் சமயத்தில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் ஆட்சிக்கு வருவதற்கு முன் ஒரு பேச்சு, ஆட்சிக்கு வந்த பின் ஒரு பேச்சு என திமுக செயல்படுவதாகவும் குறிப்பிட்டார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments