சென்னையில் நோ என்ட்ரியில் வாகனம் ஓட்டும் நபர்களுக்கு இனி ரூ.1,100 அபராதம் - 3,000 பேர் மீது வழக்குப்பதிவு..!
சென்னையில் நோ என்ட்ரியில் வாகனம் ஓட்டும் நபர்களுக்கு விதிக்கப்படும் அபராதம் 100 ரூபாயிலிருந்து ஆயிரத்து 100 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து நெரிசலை குறைப்பது உள்ளிட்டவற்றுக்காக அமல்படுத்தப்பட்டுள்ள நோ என்ட்ரி விதியை மீறி எதிர் திசையில் வரும் சில வாகன ஓட்டிகளால் விபத்துகள் நேரிடுகின்றன.
இதைத் தடுக்க சிறப்பு தணிக்கை நடத்தி 1,300 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. வழக்கமாக விதிக்கப்படும் 100 ரூபாய் அபராதத்துடன் சேர்த்து, பிறருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் வாகனம் ஓட்டும் சட்டப்பிரிவான 279ன்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, கூடுதலாக 1000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
Comments