மூக்கு வழியாக செலுத்தப்படும் கொரோனா தடுப்பு மருந்தை வயது வந்தோரிடம் மட்டும் அவசர காலத்துக்கு பயன்படுத்த மத்திய அரசு ஒப்புதல்
இந்தியாவில் முதல்முறையாக பாரத் பயோடெக் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டுள்ள மூக்கு வழியாக செலுத்தப்படும் கொரோனா தடுப்பு மருந்தை வயது வந்தோரிடம் மட்டும் அவசர காலத்துக்கு பயன்படுத்த மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா தடுப்பு மருந்தாக கோவாக்சின், கோவிசீல்ட், ஸ்புட்னிக் ஆகிய மருந்துகள் ஊசி மூலம் உடலில் செலுத்தப்படுகின்றன. இதில் கோவாக்சின் மருந்து, ஐசிஎம்ஆர் அமைப்புடன் சேர்ந்து பாரத் பயோடெக் நிறுவனம் உருவாக்கியதாகும்.
இதற்கடுத்து மூக்கு வழியாக செலுத்தப்படும் மருந்தை அந்நிறுவனம் உருவாக்கியுள்ளது. இதற்கு மத்திய மருந்து தர கட்டுப்பாட்டு நிறுவனம் ஒப்புதல் அளித்திருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மான்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.
Comments