மணவறையில் மாலையுடன் காத்திருந்த மணப்பெண்... காதலியுடன் கம்பி நீட்டிய மாப்பிள்ளை..!

0 18667

திருபோரூர் அருகே மணவரையிலிருந்து மாப்பிள்ளை காதலியுடன் ஓட்டம் பிடித்த நிலையில் , விவரம் தெரியாமல் மணப்பெண் மணமேடையில்  நீண்டநேரம் காத்திருந்து ஏமாற்றத்துக்குள்ளான சோகம் அரங்கேறி உள்ளது...

கழுத்தில் மாலை... கண்களில் கனவுகள் ... என மணவறைக்கு வந்த மணமகளை தவிக்க விட்டு ஓட்டம் பிடித்த எஸ்கேப் மாப்பிள்ளை சதீஷ்குமார் இவர்தான்..!

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அடுத்த குமிழி கிராமம் மேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்த உமாபதி , மகாலட்சுமி ஆகியோரின் மகன் சதீஷ்குமார் என்பவருக்கும், செங்கல்பட்டு மெய்யூர் கிராமத்தை சேர்ந்த இளம் பெண் ஒருவருக்கும் இரு வீட்டார் சம்மத்ததுடன் கடந்த 5 மாதத்திற்கு முன்பு திருமண நிச்சயதார்த்தம் இரு வீட்டார் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

நிச்சயதார்த்தம் முடிந்த நாளிலிருந்து மாப்பிள்ளை சதிஷ்குமார் மணப்பெண்ணிடம் சரிவர பேசியதில்லை மணப்பெண் ஃபோன் செய்தாலும் பதிலளிக்காமல் தவிர்த்து வந்ததாக கூறப்படுகிறது.

இதனிடையில் பெண் வீட்டார் மாப்பிள்ளை விட்டாரிடம் இது குறித்து பலமுறை கூறிய சரியான காரணத்தையும் சொல்லாமல் மறைதுள்ளனர். இந்நிலையில் இரு விட்டார் முறைபடி பத்திரிக்கை அடித்து அனைத்து உறவினர்களுக்கும் அழைப்பிதழ் கொடுத்த பின்னர் சம்பவத்த்ன்று இரவு திருப்போரூர் அடுத்த கொட்டமேடு பகுதியில் அமைந்துள்ள குமாரசாமி தனியார் திருமண மண்டபத்தில் திருமண ஏற்பாடுகள் தடபுடலாக நடத்தப்பட்டது.

இருவிட்டார் உறவினர்களும் பெண் வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மாப்பிள்ளை சதேஷ்குமர், மணப்பெண்ணை வாழ்த்தி புகைப்படங்கள் எடுத்துக் கொண்டனர்

இந்நிலையில் காலை திருமணத்திற்கு திருமணம் மேடையில் அய்யர் முதல்கொண்டு தாலி, தேங்காய் பூ மழையுடன் காத்திருந்து மணப்பெண்ணை அமரவைத்து நலங்கு வைத்து மாத்திரம் ஓதிக் கொண்டு இருந்தார்.

அப்போது மாப்பிளையை அழைத்தபோது மணமகன் அறையிலிருந்த மாப்பிள்ளையை காணவில்லை என்றதும் சினிமாவில் நடப்பது போல் அனைவரையும் பதரவைத்தது. பின்னர் அங்குள்ள இடங்களில் மாப்பிள்ளையை தேடும் முயற்சியில் ஈடுபட்டனர்.

மணவறையில் இருந்த மணப்பெண்ணிடம் நடந்தது என்ன என்பது தெரிவிக்கப்படாததால் மாப்பிள்ளையின் வருகைக்காக காத்திருந்து ஏமாற்றம் அடைந்தார். ஒரு கட்டத்தில் மாப்பிள்ளை மண்டபத்தில் இருந்து ஓட்டம் பிடித்தது தெரியவந்ததால், தலைகுனிந்து மனம் கலங்கி கண்ணீர் வடித்ததால் பெரும் சோகம் ஏற்பட்டது. இதனால் திருமணம் மண்டபத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.

இது குறித்து திருப்போரூர் காவல் நிலையத்தில் பெண் வீட்டார் புகார் அளித்தனர். மாப்பிள்ளை ஏற்கனவே ஒரு பெண்ணை காதலித்து வந்ததாகவும் அதனை வரதட்சனைக்காக மாப்பிள்ளை வீட்டார் திட்டம் போட்டு மறைத்து ஏமாற்றியதாக குற்றஞ்சாட்டினர்.

இதில் 40 சவரன் தங்க நகை ஏசி, கட்டில், பிரோ, 1.50 லட்சம் மதிப்பில் 125 சிசி.யமகா பைக் உள்ளிட்ட திருமணத்திற்கு தேவையான அனைத்து சாமான்களும் வரதட்சணையாக கொடுத்தும் தங்கள் பெண்ணை மாப்பிள்ளை வீட்டார் ஏமாற்றியதாக புகார் அளித்துள்ளனர்.

திருப்போரூர் போலீசார் சம்பந்தப்பட்ட திருமண மண்டபத்திற்கு சென்று அசம்பாவிதம் ஏதும் நடக்காமல் இரு தரப்பினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கண்களில் கனவுகளோடு காத்திருந்த மணப்பெண் கலங்கி கதறி அழுது கொண்டிருந்த நிலையில் காதலியுடன் ஓடிய மாப்பிள்ளையை போலீசார் தேடி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments