முறையாக பயிர் காப்பீடு கணக்கீடாததற்காக 5 விவசாயிகளுக்கு நஷ்ட ஈடு வழங்க திருவாரூர் மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவு!

0 3108

முறையாக பயிர் காப்பீடு கணக்கீடாததற்காக 5 விவசாயிகளுக்கு திருவாரூர் மாவட்ட ஆட்சியர் சுமார்  5 லட்சத்து 39 ஆயிரம் ரூபாய் நஷ்ட ஈடாக வழங்க வேண்டும் என்று நுகர்வோர் குறைதீர் ஆணையம் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது. 

மேல மருதூரை சேர்ந்த விவசாயிகள் 5 பேர், திருவாரூர் நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் 2020-2021 ஆம் ஆண்டிற்கான பயிர் காப்பீடு முறையாக கணக்கிட்டு வழங்கப்படவில்லை என்று குற்றம்சாட்டி வழக்கு தொடர்ந்திருந்தனர்.

அதில், முறையாக பயிர் காப்பீடு வழங்கப்படாதது, மன உளைச்சல், பொருள் நஷ்டம் மற்றும் சேவை குறைபாடு ஏற்படுத்தியதற்காக  நஷ்டஈடு வழங்கவும், வழக்கு செலவுத்தொகையாக 50,000 ரூபாயும் மாவட்ட ஆட்சியர், வேளாண் இணை இயக்குனர்  மற்றும் இப்கோ டோக்கியோ பொது காப்பீட்டுக் கழக முதுநிலை மேலாளர் இணைந்தோ அல்லது தனித்தோ வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments