சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று மாலை திறப்பு.!

0 2944

ஓணம் பண்டிகையை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று மாலை 5 மணி அளவில் திறக்கப்படுகிறது.

கோவில் தந்திரி கண்டரரு ராஜீவரு முன்னிலையில் மேல்சாந்தி பரமேஸ்வரன் நம்பூதிரி கோவில் நடையை திறந்து வைக்கிறார்.

10-ந்தேதி வரை கோவிலில் பூஜைகள் வழக்கம் போல நடைபெறும் என்றும் மாத பூஜை காலங்களைப் போலவே நெய் அபிஷேகம், கலச பூஜை, களப பூஜை, சகஸ்ர கலச பூஜை, படி பூஜை என அனைத்து பூஜைகளும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் வருகிற 8-ந்தேதி ஓணம் சிறப்பு வழிபாடு மற்றும் ஓண சத்யா நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. இந்நிலையில் சுவாமி தரிசனத்திற்கான ஆன்லைன் முன் பதிவு நடைபெற்று வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments