கடந்த 27 ஆண்டுகளில் 5,000க்கும் அதிகமான கார்கள் திருட்டு.. பலே திருடனை கைது செய்தது டெல்லி போலீஸ்!
நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் கடந்த 27 ஆண்டுகளில் ஏராளமான டாக்ஸி ஓட்டுனர்களை கொலை செய்து 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கார்களை திருடி விற்ற பலே திருடன் அனில் சவுகானை ஆயுத கடத்தல் வழக்கில் டெல்லி போலீசார் கைது செய்துள்ளனர்.
திருடிய கார்களை நேபால் மற்றும் ஜம்முகாஷ்மீர் மற்றும் வடகிழக்கு பகுதிகளில் விற்றுள்ளான். தற்போது உத்தர பிரதேசத்தில் இருந்து ஆயுதங்களை கடத்தி வந்து, வடகிழக்கு மாநிலங்களில் இருக்கும் தடை செய்யப்பட்ட அமைப்புகளுக்கு சப்ளை செய்து வந்த அனிலிடம் இருந்து 6 கைத்துப்பாக்கிகளையும் , ஏராளமான தோட்டாக்களையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
ஏற்கனவே இவன் டெல்லி, மும்பை மற்றும் நாட்டின் வடகிழக்கு பகுதியில் வாங்கிக் குவித்த சொத்துகள் தொடர்பாக அமலாக்கத்துறை வழக்கு தொடர்ந்துள்ளது.
Comments