'ஒவ்வொரு அரசு பள்ளியிலும் ஸ்மார்ட் வகுப்பறை' முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

0 2751

உயர்கல்வி பயிலும் அரசுப் பள்ளி மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் புதுமைப்பெண் திட்டத்தை டெல்லி முதல்வரோடு இணைந்து தொடங்கி வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 4 ஆண்டுகளில் ஒவ்வொரு அரசு பள்ளியிலும் ஸ்மார்ட் வகுப்பறை உருவாக்கப்படும் என அறிவித்தார்.

சென்னை ராயபுரத்தில் உள்ள பாரதி மகளிர் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், 6 முதல் 12ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் படித்து உயர்கல்விக்காக கல்லூரிகளில் சேர்ந்த மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் புதுமைப் பெண் திட்டத்தை முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுடன் இணைந்து, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார்.

மேலும், சென்னை உள்ளிட்ட ஊர்களில் அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய 26 தகைசால் பள்ளிகளும், 15 மாதிரி பள்ளிகளும் தொடங்கி வைக்கப்பட்டது.

நிகழ்ச்சியில் பேசிய அரவிந்த் கெஜ்ரிவால், அரசுப்பள்ளிகளை மேம்படுத்தாவிட்டால் தேசத்தின் வளர்ச்சி கேள்விக்குறிதான் என்றும், நல்ல, தரமான, இலவசக் கல்வி அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

பின்னர் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மாணவிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்குவதை அரசு செலவாக கருதவில்லை என்றும், கடமையாக கருதுவதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும், முதற்கட்டமாக 171 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 25 மாநகராட்சிகள் மற்றும் அரசு மேல்நிலைப் பள்ளிகள் தகைசால் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும் என முதலமைச்சர் அறிவித்தார். 

இதனை அடுத்து, கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், டெல்லி முதலமைச்சர் இணைந்து பார்வையிட்டு, அரசு மாதிரிப் பள்ளி மாணவர்களுடன் கலந்துரையாடினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments