நேஷனல் பார்க் தொடரை சிறப்பாக தொகுத்து வழங்கியதற்காக முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவுக்கு எம்மி விருது!

0 3270

நெட்பிளிக்ஸில் வெளியான நேஷனல் பார்க் தொடரை சிறப்பாக தொகுத்து வழங்கியதற்காக, அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவுக்கு எம்மி விருது வழங்கப்பட்டுள்ளது.

பராக் ஒபாமா, அவரது மனைவி மிஷேல் ஒபாமாவின்‘ஹையர் கிரவுண்ட்’தயாரிப்பு நிறுவனம் சார்பில் உருவான ‘Our Great National Parks’ ஆவணப் படம் கடந்த ஏப்ரலில் வெளியானது.

ஐந்து பாகங்களை கொண்ட இந்த தொடர், உலக முழுவதும் உள்ள தேசிய பூங்காங்களின் சிறப்பம்சங்கள் எடுத்துரைக்கும் வகையில் உருவாக்கப்பட்ட நிலையில், அதனை ஒபாமா தொகுத்து வழங்கினார்.

அதற்காக அவருக்கு சிறந்த தொகுப்பாளருக்கான எம்மி விருது வழங்கப்பட்டது. இதே போன்று புற்றுநோயால் உயிரிழந்த 'பிளாக் பாந்தர்' படத்தின் கதாநாயகன் சாட்விக் போஸ்மேனுக்கு அறிவிக்கப்பட்ட எம்மி விருதை அவரது மனைவி பெற்றுக் கொண்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments