ஐ போன் 5, ஐ போன் 5 சி செல்போன்களில் அக்டோபர் முதல் வாட்ஸ் அப் செயல்படாதென தகவல்
ஐபோன் 5 மற்றும் ஐபோன் 5 சி செல்போன்களில் அக்டோபர் மாதம் முதல் வாட்ஸ் அப் செயல்படாது என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
அந்த 2 செல்போன்களும், iOS 10 அல்லது iOS 11 இயங்குதளங்களில் செயல்படக் கூடியது. அந்த 2 இயங்குதளங்களிலும் வாட்ஸ் அப் செயலியை பயன்படுத்தும் வசதியை ஆப்பிள் நிறுத்தவுள்ளது. இதனால் iOS 12 இயங்குதளத்துக்கு அப்டேட் செய்தாக வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
எனினும் அந்த செல்போன்களில் அப்டேட்டுக்கு சாத்தியமில்லை என்பதால், அக்டோபர் 24 முதல் வாட்ஸ் அப்-பை பயன்படுத்த முடியாது என்றும், அதேநேரத்தில் ஐபோன் 5 எஸ் செல்போன் வைத்திருப்போர், iOS 12-க்கு அப்டேட் செய்து வாட்ஸ் அப் பயன்படுத்தலாம் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
Comments