ரஷ்யாவில் 13 ஆயிரம் அடி உயரத்தில் இருந்து விழுந்து 6 மலையேற்ற வீரர்கள் பலி
ரஷ்யாவில் எரிமலையில் ஏறிக் கொண்டிருந்த மலையேற்ற வீரர்கள் 6 பேர் 13 ஆயிரம் அடி உயரத்தில் இருந்து விழுந்து உயிரிழந்தனர்.
ரஷ்ய கிழக்கு பகுதியில் உள்ள கம்சட்கா தீபகற்பத்தில் 15,597 அடி உயரம் கொண்ட குளூச்செவ்ஸ்கயா சோப்கா எரிமலையில் இரண்டு வழிக்காட்டிகளுடன் 10 மலையேற்ற வீரர் குழுவினர், கடந்த செவ்வாய் கிழமையன்று மலையேறும் பயிற்சியை தொடங்கினர்.
இந்நிலையில், 13,000 அடி உயரத்தில் ஏறி கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக மலையேற்ற வீரர்கள் சிலர் கீழே விழுந்தனர். இதில், 6 பேர் உயிரிழந்த நிலையில் மேலும் 6 பேர் மாயமானதாக கூறப்படுகிறது. மோசமான வானிலையால் மீட்புப் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. எனினும் அவர்களை பத்திரமாக மீட்கும் முயற்சியில் மீட்பு குழுவினர் முழு வீச்சில் ஈடுபட்டுள்ளனர்.
Comments