3 நாள் அரசு முறைப் பயணமாக வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா இன்று இந்தியா வருகை.
வங்காள தேச பிரதமர் ஷேக் ஹசீனா இன்று டெல்லி வருகிறார். வங்காளத்துக்கு இந்தியா நம்பகமான நட்பு நாடு என்று அவர் புகழாரம் சூட்டியுள்ளார்.
இன்று முதல் நான்கு நாள் அரசு முறைப்பயணமாக வங்காள தேச பிரதமர் ஷேக் ஹசீனா டெல்லி வருகிறார். நாளை பிரதமர் மோடியை சந்தித்து பேச்சு நடத்த உள்ள அவர் வர்த்தகம், நதி நீர் பங்கீடு உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் குறித்து விவாதிக்க உள்ளார்.
இதில் இருதரப்பிலும் சில முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மூ, குடியரசுத் துணைத் தலைவர் ஜக்தீப் தன்கார் உள்ளிட்டோரையும் சந்திக்க அவர் திட்டமிட்டுள்ளார்.
முன்னதாக டாக்காவில் ஏ,என்.ஐ. செய்தி நிறுவனத்துக்கு தொலைக்காட்சி நேரலை வாயிலாக பேட்டியளித்த அவர், உக்ரைனில் இருந்து வங்காள தேசத்தின் மாணவர்களை பாதுகாப்பாக அழைத்து வந்த பிரதமர் மோடியின் நடவடிக்கைகளை பாராட்டினார்.
கோவிட் பரவலைக் கட்டுப்படுத்த அண்டை நாடுகளுக்கும் தடுப்பூசிகளை அனுப்பிய பிரதமர் மோடியின் நல்லெண்ணத்தையும் சுட்டிக் காட்டினார். இந்தியா வங்காளத்தின் நம்பிக்கை மிக்க நட்பு நாடு என்று வரலாற்றில் கண்டறியப்பட்டதாகவும் அவர் கூறினார். இக்கட்டான நேரங்களில் வங்காளத்துக்கு இந்தியா துணை நின்றது என்றும் ஹசீனா குறிப்பிட்டுள்ளார்.
Comments