ரஷ்ய கச்சா எண்ணெய்க்கு விலைவரம்பை நிர்ணயிக்க ஜி7 நாடுகள் முடிவு.!

0 4199

ரஷ்ய கச்சா எண்ணெய்க்கு உச்ச விலைவரம்பை நிர்ணயிக்க ஜி7 நாடுகள் ஒப்புக்கொண்ட சில மணி நேரத்திலேயே  ஜெர்மனிக்கு எரிவாயு அனுப்பப்படும் குழாயை மூடப்போவதாக ரஷ்யா அறிவித்துள்ளது.

ரஷ்யாவிலிருந்து பால்டிக் கடல் வழியாக ஜெர்மனிக்கு செல்லும் நார்ட் ஸ்ட்ரீம் ஒன் எரிவாயு குழாய், பராமரிப்பு காரணங்களுக்காக முதலில் 3 நாட்கள் மூடப்படுவதாக அறிவித்த ரஷ்யா தற்போது எண்ணெய் கசிவால் காலவரையின்றி மூடப்போவதாக அறிவித்துள்ளது.

ஏற்கனவே, எரிவாயு விலை உயர்வை கட்டுப்படுத்த முடியாமல் ஐரோப்பிய நாடுகள் திணறி வருகின்றன. குளிர்காலம் நெருங்கி வரும் வேளையில், ரஷ்யா எரிவாயு குழாயை மூடியுள்ளதால் நிலைமை மேலும் மோசமடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments