14 வருடங்களில் 16 குழந்தைகளை பெற்ற பெண்... 17-வது குழந்தைக்கு காத்திருக்கும் காதல் தம்பதி
14 வருடங்களில் பதினாறு குழந்தைகளை பெற்றெடுத்த அமெரிக்காவைச் சேர்ந்த கார்லோஸ்-பேட்டி ஹர்னாண்டஸ் தம்பதியினர், 20 குழந்தைகள் வரை பெற்றெடுக்க விரும்புவதாக தெரிவித்துள்ளனர்.
வட கரோலினா மாகாணத்தைச் சேர்ந்த அந்த தம்பதியினருக்கு ஆறு ஆண்குழந்தைகளும், பத்து பெண் குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில், மூன்று மாத கர்ப்பிணியாக இருக்கும் பேட்டி ஹர்னாண்டஸ்-க்கு அடுத்த ஆண்டு மார்ச் மாதம் 17-ஆவது குழந்தையும் பிறக்க உள்ளது.
கருத்தடை செய்து கொள்ள மறுக்கும் இந்த தம்பதியினர், இன்னும் 3 ஆண்குழந்தைகளை பெற்றெடுக்க வேண்டும் என விருப்பம் தெரிவிக்கின்றனர்.
Comments