அகதிகள் முகாமில் மின் இணைப்பை துண்டிக்காமல் கதவை திறந்த புலம்பெயர்ந்த தமிழர் உயிரிழப்பு.!
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அகதிகள் முகாமில் வீட்டின் கதவில் மின் இணைப்பு கொடுத்திருந்த புலம்பெயர்ந்த தமிழர் , மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.
கடந்த 4 மாதங்களுக்கு முன்பு மானாமதுரையில் இருந்து மண்டபம் அகதிகள் முகாமிற்கு குடிபெயர்ந்தவர் ராமலிங்கம். ஆடு, கோழிகள் வளர்த்து வந்த இவர், தனது வீட்டின் பாதுகாப்புக்காக கதவில் மின் இணைப்பு கொடுத்துவிட்டு வெளியே செல்வது வழக்கம்.
சம்பவத்தன்று இரவு வீட்டின் கதவில் மின் இணைப்பு கொடுத்து விட்டு தூங்கிய ராமலிங்கம், காலையில் சுவிட்ச்ஆப் செய்யாமல் மறந்து போய் கதவை திறக்க முயன்றபோது மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். மின் இணைப்பு கொடுக்கும் அளவுக்கு வீட்டிற்குள் அப்படி என்ன வைத்திருந்தார் ? என போலீசார் விசாரித்து வருகின்றனர்
Comments