கோவை மாநகரில் பிராங்க் வீடியோ எடுத்து மக்களின் தனிப்பட்ட சுதந்திரத்திற்கு, பாதிப்பு உண்டாக்கினால் நடவடிக்கை - மாநகர காவல்துறை எச்சரிக்கை
கோவை மாநகரில் பிராங்க் வீடியோ எடுத்து பொதுமக்களின் தனிப்பட்ட சுதந்திரத்திற்கும், இயல்பு வாழ்க்கைக்கும் பாதிப்பு உண்டாக்குவோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகர காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்த செய்திக்குறிப்பில், பிராங்க் வீடியோ என்ற பெயரில் திடீரென்று நிகழும் வரம்பு மீறிய செயல்கள், சம்மந்தப்பட்டவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிராங்க் வீடியோக்கள் எடுத்து பொதுமக்களுக்கு பாதிப்பு உண்டாக்கும் வகையில் நடந்து கொண்டால் குற்ற வழக்கு பதிவு செய்து அவர்களது யூடியூப் சேனல்களும் முடக்கப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
Comments