உலகின் மிகப் பெரும் பொருளாதார நாடுகளின் பட்டியலில் பிரிட்டனை பின்னுக்குத் தள்ளி இந்தியா 5ஆவது இடத்திற்கு முன்னேற்றம்
உலகின் மிகப் பெரும் பொருளாதார நாடுகளின் பட்டியலில் பிரிட்டனை பின்னுக்குத் தள்ளி இந்தியா 5ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
சர்வதேச நாணய நிதியம், வருடாந்திர அடிப்படையில் எடுத்த பொருளாதார வளர்ச்சிக் கணக்கீட்டில் அமெரிக்கா, சீனா, ஜப்பான், ஜெர்மனிக்கு அடுத்ததாக இந்தியா ஐந்தாவது பெரிய பொருளாதாரமாக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரிட்டனின் பொருளாதாரம் 816 பில்லியன் டாலராக உள்ள நிலையில், இந்தியாவின் பொருளாதாரம் 854 புள்ளி 7 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒரு காலத்தில் பிரிட்டனின் காலணி நாடாக இருந்த இந்தியா தற்போது அந்நாட்டை பொருளாதாரத்தில் முந்தியுள்ளது.
Comments