மெக்சிகோவில் சுவாமி விவேகானந்தரின் சிலையை திறந்து வைத்தார் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா
மெக்சிகோவில் சுவாமி விவேகானந்தரின் சிலையை மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா இன்று திறந்து வைத்தார்.
இது லத்தீன் அமெரிக்காவில் விவேகானந்தருக்கு அமைக்கப்பட்டுள்ள முதல் சிலையாகும். பின்னர் பேசிய ஓம் பிர்லா, விவேகானந்தரின் போதனைகள் முழு மனிதகுலத்திற்கானது என்றும், மெக்சிகோவில் அவரது சிலையை திறந்து வைப்பதில் பெருமை அடைவதாகவும் தெரிவித்தார்.
1947ல் இந்தியாவை சுதந்திர நாடாக அங்கீகரித்த முதல் நாடு மெக்சிகோ என தெரிவித்த ஓம் பிர்லா, வர்த்தகம், பொருளாதாரம் மற்றும் கலாச்சாரம் ஆகிய துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் வலுப்பெற்றுள்ளதாகவும் தெரிவித்தார்.
Comments