தைவானுக்கு ஆயுதம் விற்பனை செய்யும் அமெரிக்காவின் முடிவுக்கு சீனா எதிர்ப்பு
தைவானுக்கு ஒரு பில்லியன் டாலருக்கும் மேலாக ஆயுதங்கள் விற்பனை செய்யும் அமெரிக்காவின் முடிவுக்கு சீனா எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
கப்பல் ஏவுகணை தடுப்பு சாதனங்கள், வானில் இருந்தே வானில் தாக்குதல் நடத்தும் ஏவுகணைகள் மற்றும் ஹார்பூன் ஏவுகணைகள் உள்ளிட்ட ஆயுதங்களை விற்பனை செய்ய இருப்பதாக அமெரிக்க ராணுவத் தலைமையகமான பென்டகன் தெரிவித்தது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள வாஷிங்டனில் உள்ள சீன தூதரக செய்தித் தொடர்பாளர் லியு பெங்யு, தேவையான எதிர் நடவடிக்கைகளை மேற்கொள்ளப்படும் என்றும், சீனாவின் உள் விவகாரங்களில் அமெரிக்கா தலையிடுவதாகவும் தெரிவித்தார்.
Comments