கலங்கிய கண்களுடன் 27 ஆண்டுகால டென்னிஸ் பயணத்திலிருந்து வெளியேறினார் செரினா வில்லியம்ஸ்

0 4824

23 முறை கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்ற அமெரிக்க வீராங்கனை செரினா வில்லியம்ஸ், தனது 27 ஆண்டுகால டென்னிஸ் பயணத்தை நிறைவு செய்தார்.

நியூயார்க்கில் நடைபெறும் அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில், மகளிர் ஒற்றையர் பிரிவு 3வது சுற்றில் செரினா வில்லியம்ஸ், ஆஸ்திரிலேய வீராங்கனை அஜ்லா டோமலஜனோவிக் (Ajla Tomljanović) உடன் மோதினார்.

பரபரப்பான ஆட்டத்தில் 7-5, 6-7, 6-1 என்ற செட் கணக்கில் செரீனா வில்லியம்ஸ் தோல்வி அடைந்ததைத் தொடர்ந்து, அவர் போட்டியில் இருந்து வெளியேறினார்.

அமெரிக்க ஓபனுடன் தான் ஓய்வு பெறுவதாக செரீனா ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில், அவர் தனது டென்னிஸ் பயணத்தை நிறைவு செய்தார்.

போட்டியின் முடிவில் உணர்ச்சிப் பெருக்கில் கண்கலங்கிய செரினா வில்லியம்ஸ், இத்தனை ஆண்டுகளாக தனக்கு ஆதரவு தெரிவித்த பெற்றோருக்கும் சகோதரிக்கும் நன்றி தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments