தைவானுக்கு 1.1 பில்லியன் டாலர் ஆயுதங்கள் விற்பனை செய்ய அமெரிக்கா ஒப்புதல்
தைவானுக்கு சுமார் ஒரு பில்லியன் டாலருக்கும் மேலாக ஆயுதங்கள் விற்பனை செய்ய அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளது. இதில் கப்பல் ஏவுகணை தடுப்பு சாதனங்கள் 60 , வானில் இருந்தே வானில் தாக்குதல் நடத்தும் 100 ஏவுகணைகள் ஆகியவை உள்ளடங்கும் என்று அமெரிக்க ராணுவத் தலைமையகமான பென்டகன் தெரிவித்துள்ளது.
355 மில்லியன் டாலர் மதிப்புடைய ஹார்ப்பூன் ஏவுகணைகள் இதில் முக்கியமானவை. சீனாவின் அச்சுறுத்தலை எதிர்கொள்ள தைவானுக்கு நவீனஆயுதங்களை அளித்து பலப்படுத்த அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.
அமெரிக்காவின் முக்கியப் பிரமுகர்கள் தைவானுக்கு செல்வதையடுத்து சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே முரண்பாடு அதிகரித்து வருகிறது.
Comments