பிரமிக்க வைக்கும் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியின் புதிய படங்கள்...!
ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கி, நமது சூரிய குடும்பத்திற்கு வெளியே உள்ள ஒரு கிரகத்தின் முதல் நேரடி படத்தை படம் பிடித்துள்ளது.
வியாழனை விட 6 முதல் 12 மடங்கு நிறை கொண்ட HIP 65426 B எனப்படும் இந்த எக்ஸோப்ளானெடில் மிக அதிக அளவு வாயு இருப்பதாகவும், அதில் பாறை மேற்பரப்பு இல்லாததால், மனிதர்களால் வாழ முடியாது என்றும் அறிவியல் அறிஞர்கள் கூறுகின்றனர்.
சிலியில் உள்ள ஐரோப்பிய ஆய்வகத்தின் மிகப் பெரிய தொலைநோக்கியில் SPHERE கருவியைப் பயன்படுத்தி 2017-ல் வானியலாளர்களால் இந்த எக்ஸோப்ளானெட் கண்டுபிடிக்கப்பட்டது.
சூரியனிலிருந்து 100 மடங்கு தொலைவில் உள்ள இந்த எக்ஸோப்ளானெட்டை ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி நீண்ட அலை நீளங்களைப் பயன்படுத்தி படம் பிடித்துள்ளது.
Comments