உலகளவில் பல இடையூறுகள் இருந்தபோதிலும் 50 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு இந்தியா ஏற்றுமதி செய்துள்ளது - பிரதமர்
கடந்த ஆண்டு உலகளவில் பல இடையூறுகள் இருந்தபோதிலும், இந்தியா 50 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு ஏற்றுமதி செய்ததாகவும், அண்மையில் வெளியான ஜி.டி.பி. குறித்த புள்ளி விவரங்கள், கொரோனா காலத்தில் எடுத்த மீட்சி நடவடிக்கைகளை எடுத்துரைப்பதாகவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
கர்நாடகாவின் மங்களூருவில் சுமார் 3 ஆயிரத்து 800 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை பிரதமர் தொடங்கி வைத்தார்.
பின்னர் பேசிய அவர், மத்திய அரசின் தொடர் நடவடிக்கைகளால் துறைமுகங்களின் திறன் 8 ஆண்டுகளில் இரட்டிப்பாகியுள்ளதாகவும், வளர்ந்த நாடாக இந்தியாவை மாற்ற உற்பத்தித் துறையை விரிவுப்படுத்தப்பட வேண்டும் என்றும் கூறினார்.
Comments