தங்கை தற்கொலை செய்ததால் மச்சானை கொலை செய்த மைத்துனர்..
மதுரை அருகே, தங்கை தற்கொலை செய்ததால் மச்சானை கழுத்தறுத்து கொலை செய்த மைத்துனர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
புதன்கிழமை ஈச்சனேரியில் காளிதாஸ் என்பவர் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
கூலித்தொழிலாளியான காளிதாஸுக்கு வேறொரு பெண்ணோடு தொடர்ப்பு இருந்ததால் சில மாதங்களுக்கு முன் அவரது மனைவி வனிதா விஷமருந்தி தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது.
போலீஸ் விசாரணையில், வனிதாவின் அண்ணனான முத்துப்பாண்டி நண்பர்கள் 3 பேருடன் காளிதாஸை மது அருந்த அழைத்துச்சென்று பின் கத்தியால் கழுத்தை அறுத்து கொலை செய்தது தெரியவந்தது. முத்துப்பாண்டி உள்பட 3 பேரை கைது செய்த போலீசார், தலைமறைவாக உள்ள மற்றொரு நபரை தேடிவருகின்றனர்.
Comments