‘சிம்டாங்காரன் பாடகர் பம்பா பாக்யா திடீர் உயிரிழப்பு ஏன் ? மருத்துவர்கள் சொல்வது என்ன ?

0 4451

ஏ.ஆர்.ரகுமான் இசைக்குழுவில் பாடகராக இருந்த சிம்டாங்காரன் பாடகர் பம்பா பாக்யா மாரடைப்பால் மரணமடைந்தார்.. அவருக்கு வயது 49..  சில பாடல்களே பாடி இருந்தாலும் தனது அசாத்திய திறமையால், கவனம் ஈர்த்தவர் உயிரிழந்த சோகம் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு..

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் இசைக்குழுவில் அங்கம் வகித்ததால் சர்க்கார் படத்தில் நடிகர் விஜய்க்காக பாடிய சிம்டாங்காரன் என்ற பாடலை பாடியதால் பட்டி தொட்டியெல்லாம் பிரபலமானவர் பாக்கியராஜ் என்கிற பம்பா பாக்யா..!

தொடர்ந்து ரஜினிகாந்தின் 2பாயிண்ட் ஓ படத்தில் புள்ளினங்காள் என்ற பாடலை பாடி மெலடி ரசிகர்களை உருக வைத்தவர் பம்பா பாக்யா..!

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் கேட்டுக் கொண்ட ஒரே காரணத்திற்காக தன்னை மற்ற பாடகர்களிடம் இருந்து வேறுபடுத்திக் காட்டுவதற்காக முண்டாசு கட்டி மேஜிக் நிபுணர் போல வலம் வந்தவர் பம்பா பாக்யா....

அண்மையில் ஏ.ஆர்.ரகுமான் குரலில் வெளியான பொன்னி நதி பாடலின் ஆரம்ப வரிகளை தனது குரலால் பாடி அசத்தி இருந்தார் பாடகர் பம்பா பாக்யா. இசையில் ஆர்வத்துடன் இயங்கிக் கொண்டிருந்த அவர் தனது உடல் எடையை சீராக வைத்திருக்க தவறியதாக கூறப்படுகின்றது.

இந்த நிலையில் அவருக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டதன் காரணமாக சிகிச்சைக்காக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் சிகிச்சை பலனின்றி பாடகர் பம்பா பாக்யா பரிதாபமாக உயிரிழந்ததாக கூறப்படுகின்றது

49 வயதே ஆனா பம்பா பாக்யா மட்டுமல்ல நம்மில் பலர் , தினமும் எளிய உடற்பயிற்சி, உடல் எடையை கட்டுக்குள் வைத்திருத்தல், உணவுக்கட்டுப்பாடு உள்ளிட்டவற்றை பின் பற்றாத காரணத்தால் மாரடைப்பு ஏற்படுவதாக மருத்துவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments