உரிய விலை கிடைக்காததால் வேதனை.. 700 மூட்டை சின்ன வெங்காயம் குட்டையில் கொட்டி அழிப்பு
ஓசூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் சுமார் 50 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில், முட்டைக்கோஸ், காலிஃபிளவர், சவ் சவ், உருளைக்கிழங்கு, கேரட், பீன்ஸ், சாம்பார் வெங்காயம் உள்ளிட்ட காய்கறிகளை அப்பகுதி விவசாயிகள் பயிரிட்டு வருகின்றனர்.
இந்நிலையில், சானமாவு கிராமத்தைச் சேர்ந்த அனில்குமார் என்பவர் விளைவித்த 700 மூட்டை சின்ன வெங்காயத்தை உரிய விலை கொடுத்து வியாபாரிகள் வாங்க வராததால், அத்தனை மூட்டை வெங்காயத்தையும் தொடர்ந்து சேமித்து வைக்க இயலாமல் டிராக்டரில் ஏற்றி வந்து தண்ணீர் குட்டையில் கொட்டி அழித்து வருகிறார்.
அப்பகுதியில் விவசாயிகள் நலன் கருதி காய்கறி சேமிப்பு கிடங்கு அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
Comments