இ.பி.எஸ். மீண்டும் முதலமைச்சராக பிள்ளையார் சுழி போடப்பட்டுள்ளது - எஸ்.பி.வேலுமணி
ஜுலை 11ஆம் தேதியன்று நடைபெற்ற அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் செல்லும் என உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்த நிலையில், அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் தங்கள் கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.
உயர்நீதிமன்ற தீர்ப்பின் மூலம், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவிற்கு பின் எடப்பாடி பழனிசாமி தான் என்பது உறுதியாகியுள்ளதாகவும், கட்சி தொண்டர்களுக்கு இனி எந்த குழப்பத்திற்கும் இடமில்லை என்றும் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
ஓ.பி.எஸ். தரப்பு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தாலும், நியாயம் தங்கள் பக்கம் இருப்பதால் தாங்கள் தான் கண்டிப்பாக வெல்வோம் என முன்னாள் அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.
எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதலமைச்சராக இன்று பிள்ளையார்சுழி போடப்பட்டுள்ளதாகவும், 98% பொதுக்குழு உறுப்பினர்கள் இ.பி.எஸ்.க்கு ஆதரவாக உள்ளதாகவும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.
அ.தி.மு.க. கொடி, கட்சியின் தொண்டர்கள் இனி எடப்பாடி பழனிசாமிக்கு தான் சொந்தம் என்றும் வேறு யாரும் சொந்தம் கொண்டாட முடியாது என்றும் பொள்ளாச்சி ஜெயராமன் தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதாவின் பள்ளியில் பயின்ற இ.பி.எஸ். மிகச்சிறந்த மாணவர் என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
Comments