நகைக்கடையின் பூட்டை உடைத்து 281 சவரன் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம்... 3 கொள்ளையர்கள் கைது

0 3504

கள்ளக்குறிச்சி அருகே புக்கிரவாரி புதூர் கிராமத்தில் உள்ள ஸ்ரீகுமரன் ஸ்வர்ண மஹால் நகைக்கடையின் பூட்டை உடைத்து 281 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில், புனேவை சேர்ந்த 3 பேரை போலீசார் கைது செய்து ஒன்றரை கிலோ தங்க நகையை பறிமுதல் செய்துள்ளனர்.

லோகநாதன் என்பவருக்கு சொந்தமான நகைக்கடையில் கடந்த ஆகஸ்ட்7-ந்தேதி நள்ளிரவில் பூட்டை அறுத்து உள்ளே சென்ற கொள்ளையர்கள், கடைக்குள் இருந்த நகைகளை ட்ரேக்களுடன் அள்ளிச் சென்றனர்.

இதுகுறித்த புகாரில் மூன்று தனிப்படை அமைத்து போலீசார் தேடி வந்த நிலையில், சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் மகாராஷ்டிரா மாநிலம் புனேவைச் சேர்ந்த 3 பேரை புதுச்சேரியில் கைது செய்தனர். இச்சம்பவத்தில் தொடர்புடைய மேலும் ஒருவரையும் தேடி வருகின்றனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments