ஜிவி பிலிம்ஸ் நிறுவனத்தின் ரூ.9 கோடி சொத்துக்கள் பறிமுதல்.. நிதி முறைகேட்டில் ஈடுபட்டதால் அமலாக்கத்துறை நடவடிக்கை..!
திரைப்படத் தயாரிப்பாளரான ஐசரி கே கணேசன் நடத்தி வரும் ஜிவி பிலிம்ஸ் நிறுவனம் தொடர்புடைய சுமார் 9 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத் துறை பறிமுதல் செய்துள்ளது.
ஜி.வெங்கடேஸ்வரன் கடன் சுமையால் அவர் தற்கொலை செய்து கொண்ட பின்னர், இந்த நிர்வாகம் கை மாறி தற்போது ஐசரி கணேஸ் பொறுப்பில் உள்ளது.
கடந்த 2007-ஆம் ஆண்டு செபி நடத்திய விசாரணையில் ஜிவி பிலிம்ஸ் வெளிநாட்டு நிறுவன பரிவர்த்தனையில் முறைகேட்டில் ஈடுபட்டதாக கண்டுபிடிக்கப்பட்டது.
அதன் அடிப்படையில் முதற்கட்டமாக தஞ்சாவூரில் உள்ள பல திரைகளைக் கொண்ட ஜி.வி காம்ப்ளக்ஸ் என்ற 8கோடியே 94லட்சம் ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்கத்துறை பறிமுதல் செய்துள்ளது.
Comments