சிக்கிம் மாநிலத்திற்கு சுற்றுலா சென்று நிலச்சரிவில் சிக்கித் தவித்த 68 பேர் மீட்பு
வடக்கு சிக்கிமில் உள்ள யும்தாங் பள்ளத்தாக்கில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கித் தவித்த பெண்கள், குழந்தைகள் உள்பட 68 சுற்றுலாப் பயணிகளை இந்திய ராணுவ வீரர்கள் பத்திரமாக மீட்டனர்.
பனிப்பாறை ஏரி வெடித்து மலைப்பாதையில் திடீரென பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற இராணுவ வீரர்கள் நிலச்சரிவில் சிக்கியவர்களை மரப்பலகை நடைபாதை, கயிறு, மனித சங்கிலி உருவாக்கி மீட்டனர்.
நிலச்சரிவில் உயிர்ச் சேதம் ஏதும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் பாதுகாப்பாக அழைத்துச் செல்லப்பட்டு உணவு மற்றும் மருத்துவ வசதிகள் வழங்கப்பட்டன.
Comments