இலங்கைக்கு 2.9 பில்லியன் அமெரிக்க டாலர் கடன் - சர்வதேச நாணய நிதியம் ஒப்புதல்
பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள இலங்கைக்கு அடுத்த 4 ஆண்டுகளில் 2.9 பில்லியன் அமெரிக்க டாலர் கடன் அளிக்க சர்வதேச நாணய நிதியம் ஒப்புதல் அளித்துள்ளது.
அந்நிய செலாவணி பற்றாக்குறையால் கடும் பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள இலங்கை, வெளிநாடுகளிடமிருந்து இதுவரை 51 பில்லியன் டாலர் வரை கடன் பெற்றுள்ளது.
இதில், 28 பில்லியன் டாலரை வருகிற 2027-க்குள் திருப்பி செலுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
Comments