ராஜஸ்தான் மாநிலம் உதய்பூருக்கு சென்ற இண்டிகோ விமானத்தில் என்ஜின் கோளாறு

0 4956

டெல்லியில் இருந்து உதய்பூர் நோக்கி புறப்பட்ட இண்டிகோ விமானம் எஞ்சின் கோளாறு காரணமாக மீண்டும் டெல்லியிலேயே தரையிறக்கப்பட்டது.

எஞ்சினில் அதிர்வு ஏற்பட்டதை உணர்ந்த விமானி விமான நிலைய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்ததை அடுத்து விமானத்தை பத்திரமாக தரை இறக்க உத்தரவிடப்பட்டது. அந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகள் அனைவரும் வேறு ஒரு விமானத்தில் அனுப்பி வைக்கப்பட்டனர்.

இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்படும் என்று விமான போக்குவரத்து கண்காணிப்பு ஆணைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார். தொழில்நுட்ப கோளாறு காரணமாக நேற்று மட்டும் டெல்லி விமான நிலையத்திற்கு விமானம் திரும்பிய சம்பவம் 2வது முறையாக நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments