அரசுப் பள்ளியில் பயின்று உயர்கல்வி நிறுவனங்களில் சேருவோர் கட்டணத்தை அரசே ஏற்கும் - தமிழக அரசு

0 2770

அரசுப்பள்ளிகளில் 6 முதல் 12ஆம் வகுப்பு வரை பயின்று, ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம்., எய்ம்ஸ் போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் சேரும் மாணவர்களின் கல்விச் செலவை தமிழக அரசே முழுவதும் ஏற்கும் என அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

அதன் படி, கல்வி நிறுவனத்தின் நுழைவுத் தேர்வு மதிப்பெண், சேர்க்கை ஆணை போன்றவற்றுடன் சம்மந்தப்பட்ட மாணவர் ஆட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தொழில்நுட்பக் கல்வி இயக்குனரகம், மாணாக்கரின் வங்கிக் கணக்குகளில் நேரடியாக நிதியை வழங்குவார்கள் என்றும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments